• Aug 18 2025

கார்த்தியின் மனிதநேய செயல்... சிவகுமாரின் கண்களில் கண்ணீர்.! நடந்தது என்ன.?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் கலையரசராக திகழும் சிவகுமார், தனது சிறு வயதில் படித்த கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். அந்தப் பள்ளியின் நூற்றாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், சிவகுமாரும் அவரது மகன் மற்றும் நடிகரான கார்த்தியும் பங்கேற்று விழாவை சிறப்பித்திருந்தனர்.


தந்தை சிவகுமார் படித்த பள்ளி என்பதாலும், பள்ளியின் நூற்றாண்டு விழா என்பதாலும் கார்த்தி விழாவிற்கு சிறப்பு வரவேற்புடன் அழைக்கப்பட்டிருந்தார். மேடையில் உரையாற்றிய கார்த்தி, அங்கு நின்றபோது தனது தந்தையின் பள்ளியை காணும்போது ஏற்பட்ட உணர்வுகளை உணர்ச்சிவசப்பட பகிர்ந்தார்.

உணர்ச்சி மிகுந்த தருணத்தில் கார்த்தி, தனது குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு விஷயத்தை முதல் முறையாக அனைவருக்கும் முன் பகிர்ந்திருந்தார். அதன்போது, "என் அத்தைக்கு கல்வியை தொடர வசதி இல்லாத சூழல் ஏற்பட்டது, அதை கடைசிவரை மறக்கவே இல்லை." என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.


அத்துடன்,"இப்பள்ளிக்கு எனது பங்களிப்பாக ரூ.5 லட்சம் நன்கொடையாக அளிக்க விரும்புகிறேன்," என அறிவித்த கார்த்தி, அங்கு இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அத்துடன், இந்தச் செயலுக்குப் பிறகு, மேடையில் இருந்த சிவகுமார் அவர்களின் கண்களில் கண்ணீர் வந்தது. மகனின் செயலால் நெகிழ்ந்து அவர் மேடையில் நின்ற கார்த்தியை கட்டியணைத்தார். இந்த காட்சி, அங்கிருந்த அனைவரையும் உருக்கத்தில் ஆழ்த்தியது.

Advertisement

Advertisement