• Jun 23 2024

கண்ணம்மாவை படத்துலயும் ஓடவிட்ட கொடுமை.. பாதியில் கழண்டு விழுந்த... ரோஷினி உடைத்த பகிர்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர்தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவர் தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு கால் பதித்துள்ளார்.

 ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியல் கண்ணம்மா என்ற கேரக்டரில் மிகவும் தத்ரூபமாக நடித்திருந்தார் ரோஷினி. இந்த சீரியலில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான இவர், தனது கர்ப்ப காலத்தில் கணவரை பிரிந்து வீதி வீதியாக அலைந்து திரிந்த காட்சிகள் தற்போது வரையில் வைரலாகி வருகின்றன.

இதைத்தொடர்ந்து தற்போது சூரி  நடிப்பில் வெளியான கருடன் படத்திலும் உன்னி முகுந்தனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதிலும் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

இந்த நிலையில்,  தற்போது கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இதில் நடித்த பிரபலங்களை யூட்யூப் சேனல்கள் போட்டி போட்டு பேட்டி எடுத்து வருகின்றன.


அதன்படி ரோஷினி பேட்டி ஒன்றில் கூறுகையில், கருடன் படத்திற்கு பிறகு இன்னும் இரண்டு படங்களில் கமிட்டாகி உள்ளதாகவும் அதில் ஒரு படத்தில் தங்கச்சியின் நிச்சயதார்த்திற்கு தன்னை விட்டு விட்டு சென்று விடுகிறார்கள் இதனால் நான் ஓடியே செல்ல வேண்டும். என்னை வீதியில் ஓட விட்டுட்டார்கள்.

இதன் போது நானும் ஓடிக்கொண்டே இருந்தேன். கொஞ்ச தூரம் ஓடிய பின் உணர்வு வந்தது. எனது தலையில் இருந்து பாரம் குறைந்தது போல. அதாவது எனது ஜாடை கழண்டு கீழே விழுந்து விட்டது.

ஆனால் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு பக்கம் ஷூட்டிங் நடந்து கொண்டுள்ளது. இன்னொரு பக்கம் மக்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் உள்ளார்கள். இடையில் எனது முடி கழண்டு விழுந்து விட்டது என்று கலக்கலாக பேட்டியொன்றை கொடுத்துள்ளார் ரோஷினி.


Advertisement

Advertisement