• Sep 20 2024

ரகசியத்தை போட்டு உடைக்கும் கண்ணம்மா -ஷாக்கில் பாரதி…நடக்கப்போவது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியல் கடந்த ரி.ஆர்.பி ரேட்டிங்கிலும் ரொப் 5 இற்குள் வந்தது.

இவ்வாறுஇருக்கையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாரதிகண்ணம்மா சீரியலில் முக்கியமான ட்விஸ்டை கொடுத்து இருக்கிறார் இயக்குனர். அதாவது இத்தனை நாளாக ஹேமாவுக்கு தனது அம்மா யார்? என்ற சந்தேகம் வந்ததே இல்லை. ஆனால் சமையல் அம்மாவின் பெயர் கண்ணம்மா என்று தெரிந்த நாளிலிருந்து ஹேமாவுக்கு தனது அம்மாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய எண்ணம் வந்து விட்டது.

அதே போல், பாரதி - கண்ணம்மாவுக்கு டைவர்ஸ் கொடுக்க போகும் விஷயமும் ஹேமாவுக்கு தெரிந்து விட்டதால் அவரை சமாளிப்பது பாரதிக்கு சிக்கலானது.மேலும் இப்படி இருக்கையில் தனது பிறந்த நாள் பரிசாக அம்மாவின் புகைப்படத்தை கேட்கிறார் மகள் ஹேமா.

பாரதியும் அதற்கு சரி என்று கூறிவிடுகிறார்.பாரதி யாரை அம்மாவாக காட்ட போகிறார் என தெரிந்து கொள்ள குடும்பத்தில் இருப்பவர்கள் ஆர்வமாக இருந்தனர்.எனினும் அதே நேரம் கண்ணம்மா, அந்த இடத்தில் வேற பெண்ணின் புகைப்படம் இருந்தால் கொலையே நடக்கும் என ஏற்கெனவே கூறி இருந்தார்.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ட்விஸ்டுகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

பாரதி புகைப்படத்துடன் வருகிறார். ஹேமாவும் ஆவலுடன் அதை பார்க்கிறார். அதில் இருப்பது பாரதி கல்லூரியில் காதலித்த ஹேமாவின் முகம். கண்ணம்மாவுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. அதே நேரம் கோபமும் வருகிறது.

இந்நிலையில் ஹேமா பற்றிய உண்மையை கண்ணம்மா போட்டுடைக்கிறார். தனக்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் என்பதையும் கூறி விடுகிறார். கண்ணம்மா சொல்வது அனைத்தும் உண்மை என்கிறார் சவுந்தர்யா. இதை கேட்ட பாரதி பேரதிரிச்சியில் உறைந்துபோய் நிற்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement