• Apr 27 2024

KGF நடிகர் யாஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

K.G.F நடிகர் யாஷின் சொத்து மதிப்பு நடிகர் யாஷின் சொத்து மதிப்பு குறித்தான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

கன்னட சினிமாவில் கடந்த 2007ம் வெளியான Jambada Hudugi என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் யாஷ். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இருப்பினும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான KGF திரைப்படத்தின் மூலம் இந்த சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக மாறிவிட்டார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய KGF 2 திரைப்படம் வேற லெவலில் ஹிட்டடித்துள்ளது.

இதுவரை கன்னடத்தில் மட்டுமே 21 படங்கள் நடித்துள்ள இவர் இதற்கு மேல் அவர் வேறு மொழிகளிலும் படம் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இப்படி வெற்றி நாயகனாக வலம் வரும் யாஷ் சின்னத்திரையில் 2004ம் ஆண்டே நுழைந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் யாஷின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது யாஷின் சொத்து மதிப்பு ரூ. 53 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் இவர் வசிக்கும் வீடு மட்டும் ரூ 6 கோடி என கூறப்படுகிறது. மேலும் விளம்பர மாடலிங்களுக்கு ரூ 60 லட்சம் பெறுவதாகவும்.

K.G.F ரிலீசுக்கு முன்பு 4 முதல் 5 கோடிவரை சம்பளம் பெற்ற யாஷ் தற்போது,K.G.F- 2 படத்திற்காக ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கார்களின் மதிப்பு ரூ 3. 5 கோடி என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement