தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் நடனம், இயக்குநர் என பல துறைகளிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் ஏழைகளின் கொடை வள்ளல் என செல்லமாகவும் அழைக்கப்படுகின்றார்.
2007 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் முனி திரைப்படம் வெளியானது. இந்த படம் திரில்லர் படமாகவும் ஆக்சன் படமாகவும் பேய், அமானுஷ்யம் நிறைந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக காஞ்சனா திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நான்கு பாகங்கள் வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சனா படத்தின் நான்காவது பாகம் அடுத்த வருடம் மே மாதம் வெளியாகும் என கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் போன்ற அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், காஞ்சனா நான்காவது பாகத்தில் பூஜா ஹெக்டே நடிப்பது உறுதி என ராகவா லாரன்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகவே தெரிவித்துள்ளார். தற்போது அவருடைய பதிவு இணையத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் இதுவரையில் கவர்ச்சி நடிகை ஆகவும் மார்டன் நடிகையாகவும் காணப்பட்ட பூஜா ஹெக்டே காஞ்சனா நான்காவது பாகத்தில் எவ்வாறான கேரக்டரை ஏற்று நடிக்க போகின்றார் என்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!