• Apr 15 2026

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை வாழ்த்திய கமல்.! டுவிட்டரில் வெளியான பதிவு

shali / 1 month ago

Advertisement

Listen News!

2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்று ஒரு வரலாற்று சாதனையை பதிவு செய்தது. நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி திறமை, ஒருங்கிணைப்பு மற்றும் ஆற்றல் என்பவற்றால் நியூசிலாந்து அணியை எதிர்த்து வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரங்களும் அரசியல் வட்டாரங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில், முன்னணி நடிகர் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் கமல் ஹாசன் இந்திய அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து பெரும் கவனம் ஈர்த்துள்ளார்.

இந்த வெற்றியை முன்னிட்டு கமல் ஹாசன் தனது X தளத்தில், "எங்கள் ஆண்கள் அணி, தொடர்ச்சியாக ஐ.சி.சி. ஆண்கள் டி20 உலகக் கோப்பை சாம்பியன்கள்! ஆண்கள் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டாம் இடம், பெண்கள் ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை சாம்பியன்கள்.

ஒவ்வொரு விளையாட்டுக்கும் இதுபோன்ற உள்நாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு இருந்தால் இந்தியா என்ன சாதிக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்திய இளைஞர்களின் ஆற்றல் வரம்பற்றது. பள்ளத்தாக்குகளில் இருந்து பிரமாண்டமான மைதானங்கள் வரை, குழந்தைப் பருவ கனவுகளில் இருந்து உலக சாம்பியன்கள் வரை - இந்தியா உயர்கிறது." என்று கூறியுள்ளார் .

இந்த பதிவில் கமல் ஹாசன் இந்தியாவின் கிரிக்கெட் வளர்ச்சி, இளைஞர்களின் திறமை மற்றும் உள்நாட்டு விளையாட்டு கட்டமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement