• Jan 18 2025

அதிகரிக்கும் ஆண்டவரின் அட்டூழியங்கள்... நான் சொல்றதை நீங்க செய்யுங்க... பிக் பாஸ் முடிவில் தலையிடும் கமல்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமலஹாசன் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மிக பெரிய விஷயம். அதனாலே ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்வையிடுகின்றனர். சம்பளம் மற்றும் புகழ் என்பதை தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறாரோ என்று சினிமா வட்டாரங்கள் ஒரு புறம் கதைத்துக்கொண்டு இருக்கின்றனர். 

நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட போது எந்த அளவுக்கு கமல் வரவேற்கப்பட்டாரோ அதே அளவுக்கு தற்போது மக்களிடையே விமர்சனத்தையும் பெற்று இருக்கிறார். ஏழாவது சீசனில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்ததிலிருந்து கமல் பெயர் ரொம்பவும் டேமேஜ் ஆகிவிட்டது. ஆண்டனி வெளியே போவதற்கு முழு காரணம் கமல் தான் என்ற அளவுக்கு விமர்சனங்கள் எழுகின்றது.


கமல் ஒரு தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை கையாண்டு இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை. அவர் முடிவெடுக்கும் இடத்திலும் தலையீடு காட்டியதுதான் பெரிய பிரச்சனை. டி ஆர் பி கொடுக்கும் ஒருவரை சேனல் உள்ளே வைத்திருக்க வேண்டும் என்று நினைத்த நேரத்தில் நான் சொல்றதை நீங்க செய்யுங்க என்று ரெட் கார்டு கொடுத்து அனுப்பி இருக்கிறார்.


அதேபோன்று ஒவ்வொரு சீசனிலும் ஆறு முதல் ஏழு போட்டியாளர்களை கமல் தான் தேர்வு செய்கிறாராம். சினேகன், பவா செல்லதுரை, ஆரி அர்ஜுன், மாயா போன்றவர்கள் எல்லாம் கமலின் சிபாரிசில் உள்ளே வந்தவர்கள் தான். சமீபத்தில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே வந்திருக்கும் அர்ச்சனாவை மோகன்லால் கமலிடம் சிபாரிசு செய்து உள்ளே அனுப்பியதாக சொல்லப்படுகிறது.


ஆடை தொழிலை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ப்ரோமோட் செய்கிறார். அதேபோன்று நிறைய விலையுயர்ந்த புத்தகங்களையும் கமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரமோட் செய்து கொண்டிருக்கிறார். இதேபோன்று நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாமல் சில நேரங்களில் அரசியலையும் புகுத்தி பேசுகிறார் என்று எல்லாம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.


பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி அவரை வீட்டை விட்டு வெளியேற்றிய கமல் ஐஷு உடல் அமைப்பை வர்ணித்த  நிக்சனை கண்டிக்கவில்லை என ரசிகர்களும் பலவாறு விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement