• Mar 13 2026

எனக்கு துணையாக இருந்த தமிழ் நாட்டிற்கு நன்றி ...! கமல் ஹாசனின் உருக்கமான பேச்சு ....!

Roshika / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகராக வலம்  வருபவர் கமல் ஹசன். இவர் தற்போது "தக் லைஃப்" திரைப்படத்தின் புரொமோஷன் வேலைகள் மிக விறுவிறுப்பை நடைபெற்று வரும் நிலையில் மேடையில் பேசும் போது கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.  


தற்போது சமூக வலைத்தளங்களில் "தக் லைஃப் " இப்படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சில் கலந்து கொண்டு பேசிய விடயமாக "தமிழில் இருந்து தான் கன்னடம் பிரிந்தது" என்று கூறிய விடயம் கன்னட மக்கள் மத்தியில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி போராட்டங்கள்  நடை பெற்றிருந்தது . மேலும்  கமல் ஹசன் மன்னிப்பு கேட்க முடியாது என கூறியிருந்தார். இதனை தொடந்து அவரது கருத்துக்கு பலர் தங்களுடைய ஆதரவுகளை தெரிவித்து இருந்தனர். 


இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்வில் கலந்து கொண்டு  பேசும் போது எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ் நாட்டிற்கு நன்றி தெரிவித்திருந்தார். அதாவது " நான் உயிரே, உறவே,  தமிழே என்று சொன்னதற்கான" அர்த்தத்தினையும் இன்று நான் முழுமையாக உணர்கின்றேன் என்று கூறியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள்  தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் 








Advertisement

Advertisement