• Nov 23 2025

முகவரியில்லாத கருத்துக்கு பதில் வேண்டுமா? கமல்ஹாசனின் தைரியமான பதில்

Roshika / 3 months ago

Advertisement

Listen News!

"முகவரி இல்லாத கடிதத்திற்கு ஏன் பதில் போட வேண்டும்?" என நடிகர் விஜய் கூறியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் புதிய பரப்புரை எழுந்துள்ளது. இந்த கருத்துக்குப் பதிலளித்துள்ள மக்கள் நீதி மையம் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன், “விஜய் எனக்கு தம்பி போன்றவர்” எனத் தெரிவித்தார்.


தற்போதைய அரசியல் சூழ்நிலையில் விஜயின் வருகை ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும் நிலையில் இருக்கிறது. ஆனால் சமீபத்தில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விஜய், "முகவரி இல்லாத கடிதத்திற்கு பதில் எதற்காக?" என்று பதிலளித்திருந்தார். இது, பொதுவாகவே, சிலர் எதிர்க்கட்சியினர் மீது குற்றஞ்சாட்டுவதாகவும், சிலர் அதை நேரடியாக கமல்ஹாசனை குறிவைக்கும் பதிலாளித்துள்ளார்.


இந்த பின்னணியில், கமல்ஹாசனிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் வெகு அமைதியாக, “விஜய் எனக்கு தம்பி. அவர் என்னை பற்றி அந்த விதமாக பேசவில்லை என்று நம்புகிறேன். பேசினாலும், நான் அதை ஆளுமையுடன் எதிர்கொள்வேன்” என நிதானமாக பதிலளித்தார்.


Advertisement

Advertisement