• Jan 19 2025

4 வருட உழைப்பு..தயவுசெய்து இதை மட்டும் செய்யாதீர்கள்.. ரிலீஸுக்கு முந்தைய நாளில் கல்கி குழுவின் கோரிக்கை..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் படக்குழுவினர் தங்களது சமூக வலைதளத்தில் பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அந்த வேண்டுகோளில் இந்த படத்தை நாக் அஸ்வின் மற்றும் அவர்களுடைய குழுவினர் உருவாக்குவதற்காக நான்கு ஆண்டுகள் இரவு பகலாக கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்தின் தரத்தில் எந்த விதமான சமரசமும் செய்யாமல், முழு ஈடுபாட்டுடன் இந்த படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஒவ்வொரு படக்குழுவினர்களின் ரத்தத்தால் உருவானது, எனவே இந்த படத்தின் குழுவினர்களின் உழைப்புக்கு தயவுசெய்து மரியாதை கொடுக்கும் வகையில் இந்த படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் அதில் பார்க்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படம் இணையதளங்களில் வெளியாகாமல் இருக்க ஒவ்வொரு நிமிடமும் கண்காணிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் இருப்பினும் பார்வையாளர்களாகிய நீங்கள் எங்களுடன் இணைந்து இந்த படம் வெற்றி பெற ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீங்கள் நினைத்தால் மட்டுமே திருட்டுத்தனமாக இணையதளங்களில் பார்ப்பதை தவிர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே குறைந்தபட்சம் முதலீட்டு செலவையாவது எடுக்க முடியும் என்ற நிலை இருக்கும் நிலையில் முதல் நாளே  இந்த படம் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகிவிட்டால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் மிகவும் உருக்கமாக படக்குழுவினர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


Advertisement

Advertisement