• Jul 27 2024

சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் காடுவெட்டி படம்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்தவர் தான் ஆர்.கே சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது வெளியான படம் தான் காடுவெட்டி. இந்த படத்தை சோலை ஆறுமுகம் இயக்கியுள்ளார்.

காடுவெட்டி திரைப்படம் மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் குருவாக ஆர்.கே சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சங்கீர்த்தனா, விஷ்மியா, சுப்ரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்ரமணியன் உட்பட பல துணை நடிகர்கள் நடித்துள்ளார்கள்.


காடுவெட்டி படத்தின் கதை களம் என்னவென்றால், நகரத்தில் வாழும் மக்கள் காதலை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், கிராமத்தில் இருக்கும் மக்கள் காதலை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைத்தான் அடிப்படையாக காட்ட முனைந்துள்ளது.


நகர காதல் என்றால் பெற்றோர்கள், காதலிப்பவர்கள் ஆகியோருடன் இந்த பிரச்சனை முடிந்துவிடும். அதையே  கிராமத்துக் காதலென்றால் மதம், சாதி, எந்த மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் எதிர்கொள்கிறார்கள் என்பதை இயக்குனர் அழகாக சொல்லியுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ள காடுவெட்டி படத்தின் முதல் நாள் வசூல் விபரம் பற்றிய தகவல்கள் வெளியாகி  உள்ளது.

அதன்படி காடுவெட்டி படத்தில் முதல் நாள் வசூல் மட்டும் 17 லட்சம் என கூறப்படுகிறது. இந்த படம் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை  பெற்றுள்ள நிலையில், இனி தான் இதன் வசூல் எகிறும் என படத்தை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement