• Jan 18 2025

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்தது பிக் ஒப்போர்ட்டுனிட்டி! விஜய் டிவியில் மீண்டும் அர்ச்சனா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றுதான் பிக் பாஸ். இதுவரையில் பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 இல் 18 போட்டியாளர்கள், இரண்டு வீடு, புதிய நடைமுறைகள் என முற்றிலும் மாறுபட்ட கான்செப்டில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிக் பாஸில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் சரியான கன்டென்ட் கொடுக்காததால் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முதலாக வீட்டிற்கு புதிதாக 5 வைல்ட் கார்ட் என்ட்ரி  நுழைந்தார்கள். இதற்குப் பின்பு ஆட்டமே மாறியது.

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றிய போட்டியாளர்கள் மற்றும் வைல்ட் கார்ட் என்ட்ரிகளில் இறுதி வெற்றி வரை சென்றவர்கள் தான் மாயா, அர்ச்சனா, மணி, விஷ்ணு மற்றும் தினேஷ்.


இவர்களுள் மாயாவுக்கும் அர்ச்சனாவுக்கும் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கான போட்டி அதிகமாக காணப்பட்டது. ஆனாலும் அநேகமான மக்கள் எதிர்பார்த்த வகையில் அர்ச்சனா தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆனார்.


பிக் பாஸ் சீசன் 7 வெற்றிக்கு பின்னர் சுற்றுலா செல்வது, தனியார்  நிகழ்ச்சிக்கு செல்வது, கல்லூரி நிகழ்ச்சிகள் என தனது நாட்களை பிசியாக கடந்து வருகிறார் அர்ச்சனா.

இந்த நிலையில், தற்போது மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கும் அது இது எது 3வது சீசன் நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்களும் பங்கு பற்ற உள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது.

அண்மையில் அது இது எது நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது அர்ச்சனா, க்கோள் சுரேஷ், மணி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement