• May 08 2026

தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கிய ஜோவிகா.. அதிரடியாக வெளியான போஸ்டர்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் விஜயகுமார். இவருடைய மகள் வனிதா, திருமணம் செய்து கொண்ட பிறகு தன்னுடைய குடும்பத்திலும் சினிமாவிலும் இருந்து காணாமல் போனார். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்தன.

இதைத்தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுத்த அவர், ‘மிஸஸ் & மிஸ்டர்’ படத்தை இயக்கினார். அதனை அவருடைய மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருந்தார். ஜோவிகா பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்பட்டார்.

ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜோவிகா, பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதற்கு பின் அவர் இயக்கிய ‘டீன்ஸ்’ படத்தில் நடித்தார்.

இந்த நிலையில், ஜோவிகா நடித்திருக்கும் முதல் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர் தெலுங்கில்  எம். எஸ். ராஜு உடன் பணியாற்றியுள்ளார். இதுபற்றி உருக்கமான பதிவு ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அதன்படி, “நான் எம். எஸ். ராஜு உடன் பணியாற்றியது வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக போற்றும் ஒரு அனுபவமாகும். குறிப்பாக ‘தேவி’, ‘ஒக்கடு’, போன்ற பல படங்களை தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப பார்த்து வளர்ந்த நான், இந்த வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டதை பெருமையாக நினைக்கின்றேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி ‘அகாதா’ என்ற படத்தின் மூலம் ஜோவிகா அறிமுகமாகிறார். தற்போது கதாநாயகியாக அறிமுகமாகும் ஜோவிகாவுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement