• May 08 2026

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! விக்னேஷ் சிவனின் போன் காலால் மிரண்டு போன எஸ்.ஜே. சூர்யா

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

‘LIK’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அந்த பட விழாவில் பேசிய எஸ்.ஜே. சூர்யா கூறிய சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா தனது அனுபவத்தை பகிர்ந்தபோது, “படம் வெளியான பிறகு விக்னேஷ் சிவன் எனக்கு போன் செய்தார். நான் அப்போது நைட் ஷூட்டிங் முடித்து தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென்று அழைத்து, ‘மயிலிறகே’ பாடலை மக்கள் மிகவும் ரசிக்கிறார்கள், முடிந்தால் தியேட்டருக்கு சென்று அந்த ஸ்டெப்பை மீண்டும் செய்யச் சொன்னார். நான் நைட் ஷூட்டிங் இருப்பதாக கூறினேன். ஆனால் அவர், ‘இந்த மாதிரி ஒரு தருணம் மீண்டும் வராது’ என்று சொன்னார்,” எனத் தெரிவித்துள்ளார்.


மேலும், “யாரும் ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் எடுக்கலாம். ஆனால் அதை விக்னேஷ் சிவன் உருவாக்கிய விதம் உண்மையிலேயே அசாதாரணமானது,” என்று அவர் பாராட்டியுள்ளார்.

இந்த கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஒரு இயக்குனரின் பார்வையும், நடிகர்களின் அர்ப்பணிப்பும் சேர்ந்ததே இப்படத்தின் வெற்றிக்கு காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement