• Sep 08 2024

மீண்டும் ரொமான்ஸ் படமொன்றை கச்சிதமாக முடித்த 'ஜோ' பட ஜோடி! டீசர் விரைவில்...

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குச் சென்ற நட்சத்திரங்களில் ஒருவர் தான் ரியோ ராஜ். இவர் நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து  ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ரியோ - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் ஒன்றிணைந்து ரொமான்ஸ் படம் ஒன்றில் நடித்தனர்.

இந்த படம் புதுமுக இயக்குனர் ஆன “பிளாக்‌ஷிப்”  கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.


இந்த படத்தில் திருமணமான ஆண்களின் பிரச்சனைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக மிகவும் புதுமையாகவும் யதார்த்தமாகவும் இயக்குனர் கூறியுள்ளார். இந்த படம் அனைத்து தரப்பினரும் பார்க்கும் படியான கமர்சியல் படமாக உருவாகியுள்ளது.

60 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை ஓய்வின்றி எடுக்க படக்  குழு திட்டமிட்ட நிலையில், அதனை கச்சிதமாக செய்து முடித்துள்ளனர். தற்போது படப்பிடிப்பை முடித்த கையோடு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகின்றது. 

கூடிய விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிடவும் படக்குழு தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement