• Jan 18 2025

முட்டி போட்டு திருப்பதி மலையேறிய வாரிசு நடிகை.. அம்மா போல் ஆக வேண்டும் என வேண்டுதலா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகையின் வாரிசு நடிகை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய படிக்கட்டில் முட்டி போட்டவாறு ஏறிய நிலையில் அவரது வேண்டுகோள் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் தெலுங்கு திரையுலகில் மட்டும் இன்றி பாலிவுட்டிலும் கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி என்பதும், அவரது மகள் ஜான்வி கபூர்  தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜான்வி கபூர் தான் ஹீரோயின் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் தமிழ் திரைப்படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இதுவரை 50 முறைக்கு மேல் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ள ஜான்வி கபூர் தற்போது மீண்டும் சென்றுள்ள நிலையில் இந்த முறை வித்தியாசமாக முழங்காலில் படிக்கட்டுகளில் ஏறி பயணம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறிய போது ’வாழ்க்கையின் இலக்கினை சொல்லி தருவதுதான் திருப்பதி மலை என்றும் இதை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்றும் முட்டி போட்டு படி ஏறி  ஏழுமலையானை வழங்கினால் பணிவுடன் இருக்க வைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த வேண்டுதல் திருமணத்திற்காகவா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது அவர் வெட்கத்துடன் சிரித்து பதில் சொல்லாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவர் ஒரு பேட்டியில் தனது அம்மா போல் பிரபல நடிகை ஆக வேண்டும் என்பதுதான் கனவு என்றும் அதன் பிறகு தான் திருமணம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement