• May 16 2026

திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த ‘கோ’ -பழைய நினைவுகளைத் தட்டி எழுப்பிய ஜீவாவின் பதிவு!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் ஜீவா சமீபத்தில் பகிர்ந்துள்ள உணர்ச்சி மிகுந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. “இந்த நாளில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் கே.வி. ஆனந்தை நினைவுகூர்கிறேன்” என்று தொடங்கும் அவரது பதிவு, ரசிகர்களின் மனதை நெகிழச்செய்துள்ளது. ‘கோ’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அந்த பட அனுபவங்களை ஜீவா நினைவுகூர்ந்துள்ளார்.


“உங்களிடம் இருந்து வந்த முதல் Call-ம், கடைசி மெசேஜும் இன்னும் நினைவில் இருக்கிறது. ஜீனியஸாக இருந்தீர்கள், இனியும் இருப்பீர்கள்” என்ற அவரது வார்த்தைகள், கே.வி. ஆனந்த் மீது கொண்ட அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துகின்றன. மேலும், ‘அஷ்வின்’ கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு மற்றும் அன்பிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு வெளியான ‘கோ’ திரைப்படம் அரசியல், ஊடகம், இளைஞர்களின் கனவு போன்றவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஜீவாவின் நடிப்பும், கே.வி. ஆனந்தின் இயக்கமும் பாராட்டுகளை பெற்றது. இந்த படம் அவர்களின் கேரியரில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

இப்போது 15 ஆண்டுகள் கடந்த பின்னரும், அந்த படத்தின் நினைவுகள் ரசிகர்களிடையே நிலைத்து நிற்கின்றன. ஜீவாவின் இந்த உணர்ச்சிமிகு பதிவு தற்போது வைரலாகி, ரசிகர்கள் பலரும் தங்கள் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement