• Jun 06 2026

எங்கள் அன்பே உங்களின் பலம்.. ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன அஜித்!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் அஜித் குமார், தனது நடிப்புத் திறமையுடன் மட்டுமல்லாமல் கார் பந்தய உலகிலும் தனித்துவமான சாதனைகளை படைத்து வருகிறார். நீண்ட காலமாகவே கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்டிருந்த அவர், தற்போது அதில் தீவிரமாக ஈடுபட்டு தனது திறமையை சர்வதேச அளவில் நிரூபித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அவர் தொடங்கிய ‘Ajith Kumar Racing’ அணி, துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி போன்ற பல நாடுகளில் நடைபெற்ற முக்கியமான போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளை வென்று கவனம் ஈர்த்துள்ளது.


சமீபத்தில் பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற 24H Series GT3 Pro-Am கார் பந்தயத்தில், அஜித் குமாரின் அணி 2வது இடத்தை பிடித்து பெரும் சாதனை புரிந்தது. இந்த வெற்றி அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சாதனையை தொடர்ந்து, தனது சமூக ஊடகப் பதிவில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அஜித், “உங்களது பிரார்த்தனைகளும் ஆதரவும் இல்லாமல் இந்த வெற்றிகள் சாத்தியமில்லை. உங்கள் அன்பும் ஆதரவும் எங்களை மேலும் உயரங்களுக்கு கொண்டு செல்ல ஊக்கமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த மனமார்ந்த நன்றி செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement