• Jun 26 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பணிப்பெண்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! சூர்யாவுடன் வைரல் செல்ஃபி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா மற்றும் பிரபல நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் நேற்றைய தினம் எவ்வித முன்னறிவிப்புமின்றி இலங்கைக்கு சென்றுள்ளனர்.

இந்த வருகைக்கான காரணம் குறித்து இரு தரப்பிலிருந்தும் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் சூர்யா நடித்து வருவதால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக இலங்கை சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் சூர்யா, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பணிப்பெண்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 


தங்கள் விமானத்தில் பயணித்த சூர்யாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட அந்த பணிப்பெண்களுக்கு கிடைத்த இந்த அதிர்ஷ்டம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மேலும் கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement