• Sep 28 2024

ஜெயம் ரவி எப்போதும் அப்படித்தான்! ஜெயம் ரவி பற்றி எடிட்டர் மோகன் சொன்ன அந்த விடையம்!

subiththira / 10 hours ago

Advertisement

Listen News!

ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஜெயம் ரவி. அவரின் நடிப்பிற்கும் நடனத்திற்கும் ரசிகர்கள் இருப்பதை போல அவரின் குணத்திற்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். மேடைகளிலும் பேட்டிகளிலும் ஜெயம் ரவி பேசும் விதம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது. அதற்காகவே அவருக்கு பல ரசிகர்கள் திரண்டனர் என்றே சொல்லலாம். 


இந்நிலையில் சமீபகாலமாக ஜெயம் ரவி ஒரு ஹிட் படத்திற்காக ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முதன்மையான ரோலை ஏற்று நடித்தார் ஜெயம் ரவி.  அவரது மார்க்கெட்டும் மளமளவென உயர்ந்தது. ஆனால் அதன் பிறகு வெளியான ஒரு சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியினை பெற்று தரவில்லை. 


இந்நிலையில் ஜெயம் ரவி ஹீரோவானது எப்படி என்பதை பற்றி அவரின் தந்தை எடிட்டர் மோகன் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபலமான எடிட்டரும் தயாரிப்பாளருமான மோகனின் இளைய மகன் தான் ஜெயம் ரவி. அவரது அண்ணன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் வெளியான ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமானார். 


இதைத்தொடர்ந்து தன் முதல் மகனான மோகன் ராஜாவை இயக்குனராகவும், இளைய மகன் ஜெயம் ரவியை ஹீரோவாகவும் மாற்றியது ஏன் என்பதை பற்றி எடிட்டர் மோகன் கூறியுள்ளார். சிறு வயதிலிருந்தே ராஜா இயக்குனராகவும், ரவி ஹீரோவாகவும் ஆவார்கள் என எனக்கு தெரிந்தது. ராஜாவிற்கு தலைமைபொறுப்பு அதிகமாக இருந்தது. சிறு வயதிலேயே பள்ளியிலும், வீட்டிலிலும் அவர் மிகவும் பொறுப்பாக ஒரு விஷயத்தை செய்வதில் சிறந்தவராக விளங்கினார். 


எனவே அவரை இயக்குனராக்கவேண்டும் என நினைத்தேன். அவருக்கும் இயக்குனராவதில் ஆர்வம் இருந்தது. எனவே அவரை படங்கள் பார்க்கவைப்பது, என்னுடன் சினிமா சம்மந்தமான வேலைகளுக்கு அழைத்து செல்வது என அவரை தயார் படுத்தினேன். மறுபக்கம் ஜெயம் ரவி சிறுவயதில் இருந்தே துறுதுறுவென இருப்பார். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். பள்ளியிலேயே அவரை ஹீரோவாகவே தான் ட்ரீட் செய்வார்கள். நடனம் முதல் விளையாட்டு வரை அனைத்திலும் நம்பர் ஒன்னாக இருந்தார். எனவே அவரை ஹீரோவாக அறிமுகம் செய்தேன் என்று கூறியுள்ளார். 


Advertisement

Advertisement