• Jan 19 2025

பிரியங்கா சப்போட்டஸ்க்கு மணிமேகலை போட்ட நியூ வீடியோ! இதுக்கொரு முடிவு இல்லையா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசன் வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. ஆனாலும் தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை அதிரடியாக வெளியேறிய நிலையில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் நடுவர்கள், கோமாளிகள், போட்டியாளர்கள் என பல மாற்றங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வாரம் இந்த ஷோவில் செமி பைனல் ஒளிபரப்பப்பட்டது. அதில் முதல் ஆளாக சுஜிதா பைனலுக்கு  சென்றிருந்தார். ஆனாலும் இதில் பிரியங்கா தான் டைட்டில் வென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக செயல்பட்டு வந்த மணிமேகலை கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக தனது இன்ஸ்டா  பக்கத்தில் பதிவிட்டார். எல்லாவற்றிற்கும் மேலானது சுயமரியாதை தான் என்று இந்த சீசனில் குக்காக வந்த ஒரு தொகுப்பாளினி தனது வேலையை மறந்து ஆங்கர் போல் செயல்படுகின்றார் எனது வேலையை செய்ய விடாமல் தடுக்கின்றார் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.


மணிமேகலை குறிப்பிட்ட அந்த குக் பிரியங்கா தான் என அவருக்கு எதிராக பலரும் தமது கண்டனங்களை கொட்டி வருகின்றார்கள். ஆனாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றியவர்கள்  பிரியங்கா மீது எந்த தப்பும் இல்லை மணிமேகலை கொஞ்சம் சிந்தித்து செயல்பட்டு இருக்கலாம் என்ற ரீதியில் தெரிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது மணிமேகலை மீண்டும் ஒரு வீடியோவை பதிவிட்டு தனக்கு சப்போர்ட் பண்ணியவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். தற்போது அவருடைய வீடியோ வைரலாகி வருவதோடு பிரியங்காவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement