• Sep 29 2026

தலைவர் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் இது... "வேட்டையன்" படத்தின் கதை இதுதான்... வைரலாகும் ஸ்டோரி....

shali / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் கதைக்களம் இப்படித்தான் உள்ளது என ஒரு செய்தி லீக்காகி வருகிறது.  பல ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், விஜே ரக்ஷன், அபிராமி என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் படத்தின் டீசரையும் வெளியிட்டனர். இந்த டீசர் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இந்நிலையில் இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினி ஒரு மர்டர் கேஸ்ல இருக்க ஆள் ஒருவரை சுட்டு விடுகிறார். 


ஆனால் அதுக்கப்றம் தான் தெரிய வருகிறது அது ஏதோ தப்பான விஷயம் என்று. தன் தப்பை உணர்ந்து இங்க இருக்க பெரிய ஆளுங்கள எதிர்த்து, அதுக்கு நீதி வாங்கி தர போராட்டம் தான் வேட்டையன் படத்தின் கதை என தகவல் தெரிவிக்கின்றனர். இந்த திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.



Advertisement

Advertisement