• Sep 25 2026

மனசிலாயோ பாட்டு சூப்பர் ஹிட்டடிக்க அவரும் காரணமா? சூப்பர் ஸ்டாரே சொல்லிட்டாரா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 170 ஆவது திரைப்படம் தான் வேட்டையன். இந்த திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் டப்பிங் பணிகள் என்பன நிறைவடைந்துள்ளன.

வேட்டையின் படத்தின் இசை வெளியீட்டு விழா இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. வழக்கம் போலவே ரஜினிகாந்தின் குட்டி ஸ்டோரி கேட்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். அதுபோலவே ரஜினிகாந்த் பல சுவாரசிய தகவல்களை கூறியிருந்தார்.

இந்த நிலையில் வேட்டையன் படத்தில் இருந்து வெளியான மனசிலாயோ பாடலின் வெற்றி பற்றி பேசி உள்ளார். தற்போது சூப்பர் ஸ்டாரின் இந்த தகவல் வைரலாகி வருகின்றன.

அதாவது, நான்காவது முறையாக இசையமைப்பாளர் அனிருத் சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் வெளியானது. இரண்டுமே சூப்பர் ஹிட் அடுத்தது. அதிலும் மனசிலாயோ பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மஞ்சு வாரியரின் காம்பினேஷன் சூப்பராக இருந்ததாக பலரும் கூறி வந்தார்கள்.


இந்தப் பாடல் இப்படி ஒரு வரவேற்பை பெற்று தரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் மஞ்சு வாரியரிடம் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் கொரியாகிராபி செய்ததாக பலரும் பாராட்டுகளை தெரிவித்த சூழ்நிலையில், ரஜினிகாந்த்  அதனை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். வேட்டையன் படம் இந்த ஆண்டு சூப்பர் ஹிட் ஆகுமென  நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement