• Oct 13 2026

வசமாக சிக்கப்போகும் ரோகிணி? முத்து எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? புதிய திருப்பம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் ரோகினி  சிட்டி சொன்ன மாதிரியே சத்யாவின் வீடியோவை முத்துவின் ஃபோனில் இருந்து எடுப்பதற்காக முத்துவுக்கு தெரியாமல் போனை வந்து எடுக்கின்றார். அதில் சத்யாவின் வீடியோ இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார்.

இதை தொடர்ந்து கட்டிலுக்கு கீழே இருந்து சத்யாவின் வீடியோவை தனது போனுக்கு அனுப்ப முயற்சிக்கின்றார். ஆனால் அந்த நேரத்தில் முத்துவின் போன் சார்ஜ் இல்லாமல் ஆப் ஆகி விடுகிறது.


இதனால் வெளியே போக முடியாமல் கட்டிலுக்கு கீழேயே ஒளிந்து  இருக்கின்றார். அந்த நேரத்தில் முத்து கட்டிலில் இருந்து மீனாவுடன் சாப்பிட அமருகின்றார்.

அந்த நேரத்தில் முத்து போனை தேட போனை காணவில்லை. மறுபக்கம் கீழே ரோகிணி மாட்டி உள்ளார். இதனால் இந்த விஷயத்தில் ரோகிணி சிக்குவாரா? இல்லையா? என்பதை காண  ரசிகர்கல ஆவலாய் உள்ளார்கள்.

Advertisement

Advertisement