• May 21 2024

1000கோடியை நெருங்கவுள்ள 'ஜவான்'... அதற்குள் இத்தனை கோடியா..? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'ஜவான்'. அத்தோடு நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். 


சமீபகாலமாக பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டிருக்கும் நிலையில் ‘ஜவான்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இப்படம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


வெளியான நாள் முதலே இப்படம் பல கோடி வசூலை வாரிக் குவித்து வருகின்றது. அந்தவகையில் இதுவரை உலகளவில் ரூ. 830 கோடி வசூல் செய்து ஜவான் திரைப்படம் மாபெரும் சாதனை படைத்துள்ளது. மேலும் விரைவில் இப்படம் ரூ. 1000 கோடியை கடந்து விடும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement