• Oct 16 2024

லேடி சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக சிவப்பு நிற சாரியில் கலக்கிய ஜனனி! க்யூட் வீடியோ

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் ஜனனி. இவர் இலங்கையை சேர்ந்தவர். ஆரம்பத்தில் பிரபல சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதற்காக சென்னைக்கு புறப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனிக்கு அதிஷ்டம் அடித்தது போல முதலாவது படமே இளைய தளபதி விஜய் உடன் ஒப்பந்தமானது. அதன்படி விஜய் - திரிஷா நடித்த லியோ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். முதலாவது படமே பிரபல நடிகருடன் நடித்ததால் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது.

லியோ படத்தில் நடித்த பிறகு பிக் பாஸ் ஜனனி ரசிகர்களால் லியோ ஜனனி என்று அழைக்கப்பட்டார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோ ஷூட் செய்து விதவிதமான புகைப்படங்களை வெளி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


ஆனாலும் ஏனைய பிரபலங்களை போல் அல்லாமல் நேர்த்தியாகவே ஆடைகளை அணிந்து கவர்ச்சி காட்டாமல் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இதன் காரணமாகவே ஜனனிக்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

இந்த நிலையில், தற்போது சிகப்பு நிற சேலையில் பிக் பாஸ் ஜனனி மனசிலாயோ பாடலுக்கு ஆட்டம் போட்டு உள்ளார். ஏற்கனவே இன்றைய தினம் சிகப்பு நிற சேலையில் லேடி சூப்பர் ஸ்டார் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், தற்போது ஜனனியின் புகைப்படங்களும் லைக்குகளை அள்ளி வருகின்றது.

Advertisement