பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஈஸ்வரி கோபியைப் பாத்து நீ செழியனை வெளியில கொண்டுவரனும் என்று பாத்துக் கொண்டிருக்கிற ஆனால் பாக்கியா சமையல் ஓடர் எடுத்து சமைச்சுக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்கிறார். மேலும், ஒரு அம்மா பண்ணுற வேலையா இது என்று கோபமாகக் கேக்கிறார்.
அதைக் கேட்ட கோபி, அம்மா உங்களுக்கு பாக்கியாவப் பற்றி தெரியாதோ அவளுக்கு செழியன் மீது பாசம் இருக்கு ஒருவேளை மனசில இருக்கிற வலியை மறக்கிறதுக்கு இப்புடி சமைச்சிருக்கலாம் என்று சொல்லுறார். அதுக்கு ஈஸ்வரி நீயும் எழில் மாதிரி பாக்கியாவுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சிட்ட என்கிறார்.
அதனை அடுத்து பாக்கியா செல்வியைப் பாத்து எப்புடியோ நாம தான் அமைச்சருக்கு பரிமாற வேண்டி வரும் அப்ப நம்மட பிரச்சனையை சொல்லிடலாம் என்கிறார். பின் செல்வி இண்டைக்கு எப்புடியாவது பேசி பிரச்சனையை முடிச்சிரணும் என்று சொல்லுறார். அந்தநேரம் பாத்து கவுன்சிலர் வந்து எங்க போறீங்க என்று கேக்கிறார்.
மேலும் சாப்பாடு கொடுக்கிற சாட்டில என்னைப் பற்றி சொல்லலாம் என்று நினைக்கிறீங்களோ என்று பாக்கியாவப் பாத்துக் கேக்கிறார். இதனைத் தொடர்ந்து பாக்கியாட இருந்த சாப்பாட்டை வாங்கி வேறு ஆட்களிடம் கவுன்சிலர் கொடுக்கிறார்.
பின் அமைச்சர் சாப்பாடு ரொம்பவே நல்லா இருக்கு சமைச்ச ஆட்களைக் கூப்பிடுங்க வாழ்த்துக்கள் சொல்லணும் என்கிறார். அப்ப கவுன்சிலர் அவங்களை எல்லாம் பாக்க அனுமதிக்க வேணாம் என்கிறார். அதைத் தொடர்ந்து பாக்கியா தன்ர பிரச்சனை எல்லாத்தையும் அமைச்சரிட்ட சொல்லுறார். அதைக் கேட்ட அமைச்சர் கவுன்சிலர் மீது ரொம்பவே கோபம் கொள்ளுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!