சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ரோகிணி வேற ஒருவருடன் பாசமாக போனில கதைக்கிற மாதிரி நடிச்சுக்கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த மனோஜ் யாருகூட கதைச்சுக் கொண்டிருக்கிற என்று கேக்கிறார். மேலும் எதுக்கு என்னைப் பாத்தவுடனே போனைக் கட் பண்ணிட்ட என்கிறார். அதுக்கு ரோகிணி நான் என்ர friend கூட தான் கதைச்சுக் கொண்டிருந்தனான் என்று சொல்லுறார்.
இதனை அடுத்து ஸ்ருதியோட அம்மா விஜயா வீட்ட வந்து ரவி ஹோட்டல் திறக்க பணம் கொடுக்க வந்திருக்கேன் என்கிறார். அதைக் கேட்ட விஜயா ரொம்ப நல்ல விஷயம் சம்மந்தி என்று சொல்லுறார். பின் அண்ணாமலை ரவியைப் பாத்து ஹோட்டல் ஆரம்பிக்கிற ஆசை இருக்கு என்று எங்களுக்கு ஏன் சொல்லல என்கிறார்.
அதைத் தொடர்ந்து முத்துவும் அப்பா கிட்ட கூட சொல்லாமல் முடிவெடுக்கிற அளவுக்கு நீ பெரிய மனுஷன் ஆகிட்டியா என்று கேக்கிறார். அதுக்கு ரவி, முடிவெல்லாம் எடுக்கல நாங்க சும்மா கதைச்சனாங்க அவ்வளவு தான் என்கிறார். பின் ரோகிணி ஸ்ருதி சொந்தமாக ஹோட்டல் ஆரம்பிச்சா அவளுக்குத் தான் இங்க மரியாதை இருக்கும் என்று நினைக்கிறார்.
இதனை அடுத்து விஜயா சம்மந்தி கொடுக்கிற பணத்தை வாங்கச் சொல்லுறார். பின் ஸ்ருதிக்கு எல்லாரும் வாழ்த்துக்கள் சொல்லுறார்கள். அதனைத் தொடர்ந்து முத்து தன்ர friendக்கு கல்யாணம் மட்டும் பண்ணவே கூடாது அதைப் பண்ணினதில இருந்து நிம்மதியே இல்லாமல் போச்சு என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!