• Jan 18 2025

சூர்யாவுக்கு ஹீரோயின்கள் என்றாலே அதிக ஈடுபாடு..கார்த்தி சொன்ன உண்மை!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

நவம்பர் 14 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள கங்குவா படம், இயக்குநர் சிறுத்தை சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் பெரிய பட்ஜெட் முயற்சியில் உருவாகி வருகிறது. பல மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் பிரமோஷனுக்காக, நடிகர் சூர்யா, பாபி தியோல் மற்றும் படக்குழுவினர், இந்தியா முழுவதும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள்.


இதன் ஒரு பகுதியாக, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கி வரும் Unstoppable With NPK நிகழ்ச்சியில் சூர்யா, பாபி தியோல், மற்றும் சிறுத்தை சிவா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒருபகுதியில், பாலைய்யா நடிகர் கார்த்திக்கு கால் செய்து, "உங்களின் அண்ணன் நிறைய பொய் சொல்கிறாரே?" என்று கேலியாக கேட்டார். அதற்கு கார்த்தி, "அவர் சிறுவயதிலிருந்தே அப்படித்தான், நிறைய பொய்கள் சொல்லும் அவருக்கு ஹீரோயின்கள் என்றாலே சற்றே அதிகமான ஈடுபாடு!" என்று பதிலளித்தார்.இதற்கு சூர்யா "நீ கார்த்தி இல்லடா, கத்திடா!" என்று நகைச்சுவையுடன் கூறினார், இதனால் நிகழ்ச்சியிலும் கலகலப்பான சூழல் நிலவியது.


Advertisement

Advertisement