• Sep 20 2024

இப்படி சொல்லிக்க கூச்சமா இல்ல.. அஸ்வினை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய குக்வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர் தான் அஸ்வின்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது பல ஆல்பம் பாடல்களிலும் திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்ற இவர் வெள்ளித்திரையில் என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது அஸ்வின் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அவருடைய தலைக்கணம் எனவும் பேசப்பட்டு வந்தது.

அந்த வகையில் இவர் தற்பொழுது இயக்குநர் சாலமோனின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரை வெளியிட்ட அஸ்வின் தன்னுடைய பெயரை ஏகே என குறிப்பிட்டு கொண்டார்.

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் இப்படி சொல்லிக்க உனக்கு கூச்சமா இல்லையா? ஏகே என்றால் அது அஜித் மட்டும் தான் என அவரை விமர்சனம் செய்துள்ளனர். அஸ்வின் பப்ளிசிட்டிக்காக இப்படி ஏகே என அஜித்தின் பெயரை பயன்படுத்தியதாக பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

https://www.youtube.com/embed/ODDPlX3HEf4

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement