• Jan 19 2025

கமலாவுக்கு கோபி கிழித்த கிழியில் அரெஸ்ட் ஆகும் ஈஸ்வரி.. பாக்கியா வீட்டில் புகுந்த போலீஸ்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில், கோபி வீட்டில் வைத்த பைல் ஒன்றை காணவில்லை என தேடிக்கொண்டிருக்க கமலாவிடம் கேட்கின்றார். கமலா எதுவும் பேசாமல் இருக்க, நானே தேடி எடுக்கிறேன் என்று தேடுகிறார். ஆனாலும் காணவில்லை என மீண்டும் வந்து கமலாவிடம் கேட்க, அவர் தெரியாது என சொன்னதோடு மீண்டும் கோபியுடன் வாக்குவாதப்படுகிறார். 

மேலும் ராதிகா எங்க என கேட்கவும், வீட்டில் நிம்மதி இல்ல என்று  அவ வெளியே போயிட்டா.. எல்லாத்துக்கும் காரணம் உங்க அம்மா தானே என மீண்டும் ஈஸ்வரியை இழுத்து பேச, கோபி பொறுமையை இழந்து எல்லாம் உங்களாலதான்.. நானும் ராதிகாவும் சந்தோஷமாய் இருந்தோம். நீங்க இங்க வந்த பிறகுதான் இவ்வளவு பிரச்சினையும்.. மரியாதையா நீங்களாவே  வீட்டை விட்டு வெளியே போயிடுங்க என கமலாவுக்கு எச்சரிக்கிறார். நான் பின் நேரம் வரும்போது நீங்க வீட்ல இருக்க கூடாது என அவர் எச்சரித்து செல்கிறார்.

இதை தொடர்ந்து கமலா உங்களையெல்லாம் சும்மா விடமாட்டேன் என போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஈஸ்வரி மீது புகார் கொடுக்கிறார்.


மறுபக்கம் எழில் டைரக்டரிடம் கதை சொல்வதற்காக எல்லாம் ரெடியாகி வைத்து போவதற்கு முனைய, செழியன் தான் கொண்டு போய் விடுவதாக சொல்லுகிறார். அந்த நேரத்தில் பாக்யாவும் கால் பண்ணி அவருக்கு ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லுகின்றார்.

இதை அடுத்து எல்லாரும் எழிலை வழி அனுப்ப வாசலுக்கு வருகிறார்கள். அந்த நேரத்தில் போலீஸ் உள்ளே வருகிறது. இதை பார்த்து எல்லாரும் அதிர்ச்சியாக, அங்கு வந்த போலீஸ் ஈஸ்வரி எங்கே என கேட்க, அவர் ஊருக்குப் போய் இருப்பதாக சொல்லவும் நம்பவில்லை. இதனால் வந்த போலீஸ் எல்லாரும் வீடு புகுந்து ஈஸ்வரி தேடுகின்றார்கள். 

அத்துடன் என்ன விஷயம் என எழிலும், செழியனும் மாறி மாறி  கேட்க, போலீசார் பதில் சொல்லாமல் ஈஸ்வரியை பத்தி விசாரிக்கின்றார்கள். எழில் பாட்டி கும்பகோணம் போய் இருப்பதாக சொல்ல, உடனே கும்பகோணம் போலீசுக்கு கால் பன்னி ஈஸ்வரியை அரெஸ்ட் பண்ணுமாறு சொல்லுகின்றார். இதைக்காட்டு எல்லோரும் பதற்றத்துடன் என்ன விஷயம் என்று கேட்கவும் அவர் சொல்லவில்லை இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement