• Jan 19 2025

தங்கமயிலை கேப்பே விடாமல் கலாய்த்த மீனா.. குடும்பத்தை பிரிக்க பாக்கியம் போட்ட இன்னொரு பிளான்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் இன்றைய எபிசோடில் தங்கமயில் சாப்பாடு கொண்டு போக வேண்டாம் என்று கோமதி கூற, ஆனால் அதை சட்டை செய்யாமல் தங்கமயில் பாண்டியனுக்கு போன் செய்து கேட்க, அவரும் சாப்பாடு கொண்டு வா என்று கூற ,உடனே தங்கமாயில் கோமதியை கண்டுகொள்ளாமல் சாப்பாடு கொண்டு செல்கிறார். இதனால் கோமதி கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் பாண்டியனுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு தனது அம்மா வீட்டுக்கு செல்லும் தங்கமயில், அம்மாவிடம் நடந்ததை கூறுகிறார். அத்தை தன் மேல் கோபமாக இருக்கிறார் என்றும் மீனா மற்றும் ராஜி தன்னிடம் பழக மாட்டேன் என்கிறார்கள் என்றும் அத்தை, மீனா, ராஜி, அரசி ஆகியோர் ஒரு கூட்டணியாக இருக்கிறார்கள் என்றும் என்னை சேர்க்க மாட்டேன் என்கிறார்கள் என்றும் கூறுகிறார்.

இதனை அடுத்து பாக்கியம் ’உன்னை சேர்க்கவில்லை என்றால் அந்த கூட்டணியை கலைத்துவிடு, ஒருவருக்கு ஒருவர் பிரிவினையை ஏற்படுத்து’ என்று ஐடியா கொடுக்கிறார். மேலும் ‘உன்னை கஷ்டப்பட்டு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்த என்னால், உன்னை வாழ வைக்க தெரியாதா? எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன், நான் சொல்கிறபடி செய்’ என்று தவறான அறிவுரைகளை கூறுகிறார்.



இந்த நிலையில் மீனா ஆபீஸ்ல இருந்து வரும்போது தின்பண்டங்கள் வாங்கி வர, அந்த தின்பண்டங்களை சாப்பிடக்கூடாது என்று தங்கமயில் கூறுகிறார். ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்கு தின்பண்டம் வாங்கினால், ஒரு மாதத்திற்கு 6 ஆயிரம் ரூபாய், ஒரு வருடத்திற்கு 72,000 ரூபாய், ஐந்து வருடத்துக்கு மூன்று லட்சத்துக்கு மேல், அதை வைத்து 2 சென்ட் நிலம் வாங்கலாம் என்று தங்கமயில் கூற உடனே மீனா பதிலடியாக ’நீங்கள் தின்பண்டங்கள் வாங்காமல் சேர்த்து வைத்து எத்தனை சென்ட் நிலம் வாங்கி வைத்திருக்கிறீர்கள்’ என்று கேட்க, அரசி ராஜி ஆகியோர் சரியான கேள்வி என்று கூறுகின்றனர்.

அதன் பின்னரும் தங்கமயிலை தொடர்ச்சியாக கேப்பே விடாமல் மீனா மற்றும் ராஜி கலாய்க்கும் காட்சிகளும் அதனால் தங்கமயில் வெறுப்புடன் உள்ளே செல்லும் காட்சிகளும் உள்ளன. இதனை அடுத்து மீண்டும் அடுப்பங்கரையை கோமதி ஆக்கிரமித்துக் கொள்ள, தங்கமயில் நான் சமையல் செய்கிறேன் என்று சொல்ல , அதற்கு கோமதி கூறும் பதிலடி காட்சிகளும் இன்றைய எபிசோடில் உள்ளன.

Advertisement

Advertisement