• Jan 18 2025

திடீரென மயங்கி விழுந்த ஈஸ்வரி.. பதறியடித்து ஓடிவந்த எழில்! பழனிச்சாமி செய்த காரியம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

 பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  ராமமூர்த்தி இறந்த விஷயத்தை எழிலுக்கு போன் பண்ணி சொல்லுகின்றார் செழியன். இதை கேட்ட எழில் என்ன விஷயம் என்று சொல்லாமல் அழுது கொண்டிருக்க அமிர்தா என்னவென்று கேட்கவும், தாத்தா இறந்த விஷயத்தை கூறி வருமாறு செழியன் சொல்கின்றார்.

அதன் பின்பு எழில் வீட்டு வாசலுக்கு வந்து பைக்கையும் கீழே  போட்டுவிட்டு உள்ளே வர பாக்கியா எழிலை பிடித்து அழுகின்றார். இனியாவும் தாத்தா நம்மளை விட்டு போயிட்டார் என்று அழுகின்றார். அதன் பின்பு ஏழில் ராமமூர்த்தியை சென்று பார்த்து கதறி அழுகின்றார்.

இதை தொடர்ந்து பழனிச்சாமியும் ராமமூர்த்தியின் இறப்பு செய்தியை கேட்டு வந்து கோபிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு ஈஸ்வரி உடன் இருக்கின்றார். இதன் போது ஈஸ்வரி ராமமூர்த்தியுடன் இருந்த நினைவுகளை நினைத்து மயங்கி விழுந்து விடுகின்றார்.


இதனால் எல்லாரும் பதறி அடித்து ஈஸ்வரிக்கு தண்ணீர் தெளித்து எழுப்புகின்றார்கள். அவர் தண்ணீர் குடிக்கவும் மறுத்து விடுகின்றார். இவ்வாறு ராமமூர்த்தியின் இறப்பினால் எல்லோரும் கதறி அழுது கொண்டு உள்ளார்கள் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement