• May 09 2024

திரிஷா ஒரு நல்ல நடிகையா? தனுஷ் பத்தி எனக்குத்தான் தெரியும்! பிரபல விழாவில் கூல் சுரேஷ் சொன்ன பகிர் தகவல்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் ஆரம்பத்தில் மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது 95 நாட்களைக் கடந்து  ஒளிபரப்பாகி வருகிறது. 

பிக் பாஸ் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் ஒருவர் தான் கூல் சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் நாயகனாக கொண்டாடப்படுபவர். 

இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை இருப்பினும் சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களில் தனது நகைச்சுவையான வசனங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாக அறியப்படுகிறார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கூல் சுரேஷ் தனது நகைச்சுவை மூலம் சக போட்டியாளர்களை கலகலப்பாக வைத்திருந்ததோடு, தானும் வைக்கப்பட்ட டாஸ்க்குகளில் சிறப்பாக விளையாடி வந்தார். எனினும், அவரின் விருப்பப் படியே பிக் பாஸ் வீட்டிலிருந்து அண்மையில் வெளியேறி இருந்தார்.   

இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் ஒன்று நடத்திய பிரம்மாண்ட விழாவில் பேசிய கூல் சுரேஷிடம் பின்னாடி திரிஷா புகைப்படத்தை பார்த்ததும் வெட்கப்பட்டு கண்களை மூடிக்கொண்டு வர்ணித்து பேச ஆரம்பித்தார் கூல் சுரேஷ்.


அதன்படி அவர் கூறுகையில், நடிகை திரிஷா என் தலைவன் சிம்புவோட 2 படம் நடிச்சிருக்காங்க, அவங்க ஒரு நல்ல நடிகை என்று பாராட்டினார்.

அதன் பின்னர் நடிகர் தனுஷ் போட்டோ வந்த நிலையில்,  எல்லோரும் தனுஷுக்கும் சிம்புவுக்கும் இடையே சண்டை என பேசிக்கிறாங்க, ஆனால், எனக்குத் தான் தெரியும் அவங்க எந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று.


தனுஷ் மற்றும் சிம்புவை போலத்தான் அவர்கள் ரசிகர்களும் சிம்பு படம் பார்க்க தியேட்டருக்குப் போன போது நாங்க தனுஷ் ரசிகர்கள் எங்களுக்கு கூல் சுரேஷை பிடிக்கும்,  கூல் சுரேஷுக்கு பட வாய்ப்புகள் கொடுங்க என சொன்னார்கள் என தனுஷ் போட்டோ வந்ததும் மேடையிலேயே செம உஷாராக கோல் போட்டு வாய்ப்பையும் கேட்டு விட்டார் கூல் சுரேஷ். 

Advertisement

Advertisement

Advertisement