• Sep 19 2024

நடிகர் அஜித்தைக் கலாய்த்து பேசிய அவரது மகன் ஆத்விக்- அடடே இப்படியா கூறியிருக்கிறார்?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் நடிகர்களில் முக்கியமானவர் தான் அஜித். இவர் தற்பொழுது எச்.வினோத் இயக்கத்தில் தனது 61 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரிக்கின்றார்.

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த இவர் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் முதலில் மகள் அனோஷ்காவும், பின் இரண்டாவதாக மகன் ஆத்விக்கும் பிறந்தனர்.

திருமணத்திற்குப் பிறகு ஷாலினி நடிப்பிலிருந்து விலகி குடும்பப் பெண்ணாகவே இருந்து வருகின்றார். அத்தோடு அஜித் மற்றும் அவரது குடும்பத்தினரின் புகைப்படங்கள் சமீபகாலமாக அதிகளவில் வைரலாகி வருகின்றது.

இதில் அஜித்தின் மகனின் புகைப்படங்கள் பலவற்றை பார்த்திருக்கின்றோம். ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிந்ததில்லை.இந்நிலையில், இயக்குநர் பேரரசு பேட்டி ஒன்றில் அஜித்தின் மகன் ஆத்விக் குறித்து கலகலப்பான விஷயம் குறித்து பேசியுள்ளார்

. இதில் " விஸ்வாசம் படத்தின் நேரத்தில் நான் அஜித்தின் மகன் ஆத்விக்கிடம் போன் மூலம் கால் செய்து பேசினேன். அப்போது அப்பா எப்படி இருக்கிறார் என்று நான் கேட்டேன். அதற்கு ஆத்விக் 'தூக்கு துரை தானே நல்லா இருக்காரு' " என்று கலாய்த்து பேசினாராம் என்று கூறியுள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement