• Jun 15 2026

'கருப்பு' வெற்றியின் ரகசியம் இதுதானா? வைரலாகும் சூர்யாவின் வொர்க்அவுட் வீடியோ இதோ

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் 'கருப்பு'. இந்த படத்தில் திரிஷா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படம் 340 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நீண்ட நாட்களாக ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க அயராது உழைத்து வந்த சூர்யாவுக்கு, இந்த வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதன் எதிரொலியாக, இந்தப் படத்தில் பணியாற்றிய கேமராமேன், எடிட்டர், இசையமைப்பாளர் உள்ளிட்ட பலருக்கும் கார் பரிசாக வழங்கியுள்ளார். மேலும், இந்தப் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜிக்கும் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் கடந்த வருடங்களில் வெளியான சில திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான போதிலும், அவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் சூர்யா இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில்தான் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார். இதன்போது, சூர்யாவிடம் தான் அளித்த வாக்குறுதியை கண்டிப்பாக காப்பாற்றுவேன் என ஆர்.ஜே. பாலாஜி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.


இந்தப் படத்தில் சூர்யாவின் முந்தைய வெற்றிப் படங்களின் சில ரெஃபரன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதேபோல், குடும்ப உணர்வுகள் மற்றும் ரசிகர்கள் விரும்பும் அம்சங்கள் என பலவற்றை சரியான அளவில் கலந்து ஆர்.ஜே. பாலாஜி இந்தப் படத்தை வடிவமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 'கருப்பு' படத்திற்காக சூர்யா மேற்கொண்ட வொர்க்அவுட் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாகவே சூர்யாவும் ஜோதிகாவும் தங்களது உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதோடு, ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருவார்கள்.

அந்த வகையில், 'கருப்பு' படத்திற்காக சூர்யா மேற்கொண்ட கடின உழைப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றிதான் இந்தப் படத்தின் சாதனை என்றும் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement