• May 21 2024

இதெல்லாம் டிரெஸ்ஸா?அசிங்கமா இல்ல..விக்ரமனுக்கு தக்க பதிலடி கொடுத்த ஷிவின்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இதெல்லாம் டிரெஸ்ஸா? அசிங்கமா இல்லை என்று கேட்ட விக்ரமனுக்கு ஷிவின் சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார்.விக்ரமன் நீதி,நேர்மை, நியாயம் என பேசி வருவதால், அவரை சமூகவலைத்தளத்தில் பூமர் அங்கிள் விக்ரமன் என பிக்பாஸ் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இந்தியில் மிகப்பெரிய அளவில் மக்களின் ஆதரவை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.இவ்வாறுஇருக்கையில்  தமிழில் 5 சீசன்கள் முடிந்துள்ள, நிலையில் தற்போது ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி 55 நாட்களை எட்டி உள்ளது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக சினிமா பிரபலங்கள் அல்லது பல்வேறு துறையில் சிறந்து விளங்குபவர்கள் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். ஆனால், பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக இந்த முறை அரசியல் பிரமுகர் விக்ரமன் கலந்து கொண்டுள்ளார்.

அத்தோடு பிக் பாஸ் வீட்டில் சரவெடிப்போல பட்டையை கிளப்புவார் என்று பார்த்தால், இவர் நமுத்து போன பட்டாசாக அசீம் பேசுவதற்கே கவுண்டர் கொடுத்து வருகிறார்.எனினும் அதிலும் இவரை அசீம் தான் அடிக்கடி அசிங்கப்படுத்திகொண்டே இருக்கிறார். என்னத்தான் அசீம் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் மிகவும் பொறுமையாக இருப்பதால் இதுதான் இவரின் கேம் ஸ்டேட்டர்ஜி என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


இவ்வாறுஇருக்கையில், சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் இந்த டிரஸ் போடப்போகிறேன் என்று ஷிவின் எடுத்துகாட்டுகிறார்.அத்தோடு  உடனே,ஏடிகே எந்த டிரஸ் போடாதே என்கிறார். இதையடுத்து, விக்ரமன் என்னங்க இது...அநியாயமா இல்ல இதெல்லாம், குழந்தைகள் பார்க்கிறார்கள் குடும்பத்தோடு எல்லாரும் பார்க்கிறார்கள் இந்த நிகழ்ச்சியல் இந்த டிரஸ் தேவையா என கேட்கிறார்.


குழந்தைகள் பார்ப்பதற்கும் டிரஸூக்கும் என்ன சம்மந்தம், குழந்தைகளுக்கு எல்லாத்தையும் காட்டி இது நல்லது.. மேலும் இது கெட்டது என்று சொல்லி வளருங்கள் என்று சரியான பதிலடி கொடுத்துள்ளார். பெண்ணியம், பெண்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் விக்ரமன் ஆடை குறித்து இப்படி பேசியுள்ளது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த விக்ரமனின் தீவிர ரசிகர் ஒருவர், நீங்க போட்ட ட்வீட்டை பாருங்க, எவ்ளோ ட்விஸ்ட் பண்ணி போட்டிருக்கீங்க, இந்த டிரஸ் போட அசிங்கமா இல்லையானு அவர் அந்த வீடியோவில் சொல்லி இருக்காரா? அப்படி அவர் சொன்னது உங்களுக்கு மட்டும் கேட்டுதா? அவர் அந்த டிரஸ்சை போட வேண்டாம் என்று சொல்லல, டிரெஸ் போடுறது அவங்க இஷ்டம் தான், ஆனால் பொருத்தமற்ற டிரஸ்சை ஒரு நண்பருக்கு பரிந்துரை செய்யலாம் என கருத்து பதிவிட்டுள்ளார்.



குழந்தைகள் இந்த நிகழ்ச்சியை பாக்குறாங்கனு வேற டிரஸ் போடுங்கனு சொன்னா, பெண்ணுக்கு எதிராக பேசுறாருனு அர்த்தமா? இந்த மக்களுக்கு உண்மையில் பிற்போக்கு மற்றும் இடதுசாரி சிந்தனைகள் என்னவென்று தெரியாது. விட்டா சென்சார்யா பின்னடைவுனு சொல்லுவாங்க என பதிவிட்டுள்ளார்.



Advertisement

Advertisement