• Apr 14 2026

பிக் பாஸ் அபிராமியா இது.? யாரையோ தேடுறாங்களே..! இன்ஸ்டா பக்கத்தில் கலக்கல் போட்டோஸ்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நோட்டா, நேர்கொண்ட பார்வை, வான், மூன்று துருவ நட்சத்திரம், வல்லான் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை  அபிராமி வெங்கடாச்சலம். 

இவர் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், தொடர்ந்து பெரிய அளவிலான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரிக்கும்  நோக்கிலும் அவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தன்னுடைய இலக்கை விட, சக போட்டியாளரான கவினுடன் ஏற்பட்ட நெருக்கம் அதிகமாக பேசுபொருளானது. இதனால், அவர் நிகழ்ச்சிக்கு வந்த நோக்கம் பாதிக்கப்பட்டதாக ரசிகர்கள் விமர்சித்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அபிராமிக்கு எதிர்பார்த்த அளவிற்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர், நினைத்தேன் வந்தாய் என்ற சீரியலில் நடித்தார். ஆனால் அந்த சீரியலும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.


இதற்கிடையில், ஆன்மீக நோக்கத்தில் ஈஷா யோகா மையத்திற்கு சென்ற அபிராமி, கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், தனது மனநிலை குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, “அபிராமி துறவியாகப் போகிறாரா?” என்ற கேள்விகளையும் எழுப்பியது.

ஆனால் அதற்குப் பிறகு, அரைகுறை ஆடைகளுடன் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக, அவரது ஆடைத் தேர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியானது.

இந்த நிலையில், அபிராமி சமீபத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் மீண்டும் வைரலாகி வருகின்றன. அதில் அவர் “உன்னைத் தேடி”  என கேப்ஷன் போட்டுள்ளார் டைட்டில் போட்டுள்ளார் என கேப்சன் போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் யாரை தேடுறீங்க என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

Advertisement

Advertisement