• Sep 20 2024

நடிகை அசினின் மகளா இது?…இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கி அதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் கொடிகட்டி பறந்தவரே நடிகை அசின். இவர் தமிழில் 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

இதனைத் தொடர்ந்து டாப் ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல நட்சத்திரங்களிற்கும் ஜோடியாக நடித்திருக்கின்றார். எண்ணுக்கணக்கற்ற பல படங்களில் நடித்து வந்த இவர் 'All Is Well' என்ற ஹிந்திப் படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன் பிறகு 2016ம் ஆண்டு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தார். இவர்களின் நல்ல குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஆரி என்ற பெண் குழந்தை 2017-ஆம் ஆண்டு பிறந்தது.

இந்நிலையில் நடிகை அசின் சமூக வலைத்தள பக்கங்களில் அவரின் மகளின் புகைப்படத்தை அவ்வப்போது பதிவிட்டு வருவார். எனினும் சிறுது காலமாக அப்படியான போட்டோக்கள் எதையுமே அவர் பதிவிடவில்லை. எனினும் தற்போது மறுபடியும் தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியதோடு மட்டுமல்லாமல் அவரின் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement