• May 11 2024

கங்கனா ரனாவத்திற்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் தமன்னா கூறிய அந்த வார்த்தை…என்ன தெரியுமா?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். அதுமட்டுமல்லாது தேசிய விருது பெற்ற பாலிவுட் திரையுலக நடிகையும் கூட. இவரின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை என்று தான் கூறலாம்.

சமீபகாலமாகவே பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகளவில் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் கங்கனா ரனாவத். இந்த நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இவர் நடித்திருந்த முன்னாள் தலைவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான 'தலைவி' என்ற இந்தப்படம் இவரின் திறமையை உலகிற்கே எடுத்துக் காட்டியது.

இதனைத் தொடர்ந்து இவர் தற்போது 'எமெர்ஜென்சி' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் இவர் பிரதமர் இந்திரா காந்தியை போல் நடித்துள்ளார். இந்தப் படத்தினுடைய டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரின் மத்தியிலும் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் அர்ஜுன் ராம்பால், திவ்யா தாத்தா, ஏக்கா கபூர் ஆகியோரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களை போன்றே நடிகை தமன்னாவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார். அதாவது 'எமெர்ஜென்சி' பட போஸ்டரில் "பிளடி ப்ரில்லியண்ட்" எனக் குறிப்பிட்டு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களைக் கூறி இருக்கின்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement