• May 12 2024

பிரதாப் போத்தன் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கமல்; வைரலாகும் புகைப்படம்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் பிரதாப் போத்தன். இவர் நடிகர் மட்டுமல்லாது இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஒருவராகவும் வலம் வந்தார்.

இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை காலமானார். இதற்குத் திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று தமது அஞ்சலியை தெரிவித்திருக்கின்றனர். அதாவது நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம், நடிகை கனிகா ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் கமல்ஹாசன் அவர்கள் பிரதாப் போத்தன் இயக்கிய 'வெற்றி விழா' படத்தில் நடித்திருக்கின்றார். இதனால் கமல் "விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதில் நிபுணர் என்பதை வெற்றி விழா காலத்தில் பாத்திருக்கிறேன், அவருக்கு எனது அஞ்சலிகள்" எனத் தெரிவித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது நேரில் சென்றும் தனது அஞ்சலியை செலுத்தி இருக்கின்றார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement