• May 11 2024

கவர்ச்சிப் பாதைக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்…வைரலாகும் போட்டோக்கள்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னரே திரைப்பட இயக்குநர், மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் குமாரின் மகளாக மக்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தார்.

இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளிலும் கதாநாயகியாக கலக்கி வருகின்றார். எனினும் இவர் தமிழ் சினிமாவில் முதலில் கதாநாயகியாக தோன்றியது ஏ.எல்.விஜய் இயக்கிய 'மயக்கம் என்ன' என்ற படத்தின் மூலமாகத் தான்.

முதல் படமே இவருக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுக் கொடுத்ததால் தொடர்ந்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், ரஜினி எனப் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகின்றார்.

இவ்வாறு படங்களில் எப்போதுமே பிஸியாக இருந்து வரும் நம்ம கீர்த்தி சுரேஷ் பல வர்ண உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்துவதற்கு என்றுமே மறந்ததில்லை. அவ்வப்போது போட்டோக்களை இணையத்தில் பதிவேற்றி வருவது வழக்கம். அதே போன்றே தற்போதும் கவர்ச்சியான லுக்கில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement