சந்திரலேகா என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். எனினும் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து திருமணம் செய்து குடும்பத்துடன் செட்டில் ஆனார். ஆனால் இவருக்கு குடும்ப வாழ்க்கையும் நிலைக்கவில்லை. இதுவரையில் மூன்று திருமணங்கள் செய்துள்ளார் வனிதா.
d_i_a
இன்னொரு பக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு வனிதாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அவருடைய மகள் ஜோவிகாவையும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி பிரபலம் அடைய வைத்ததோடு அவரை பிரபல இயக்குநரும் நடிகருமான பார்த்திபனுக்கு அசிஸ்டெண்டாக பணிபுரிய வைத்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் வனிதா விஜயகுமார் வழங்கிய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் ஆம்பளைங்கள வெறுத்துப் போச்சு. அதனால பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவர் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி, வனிதா விஜயகுமார் தான் இதுவரையில் மூன்று திருமணங்கள் செய்தும் எனக்கு திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. அதனால் ஆம்பளைகளுக்கு பதிலாக பெண்ணை திருமணம் செய்து இருக்கலாம்.. தற்போது பலரும் அதை ஆதரிக்கின்றார்கள் தானே என தெரிவித்துள்ளார்.
வனிதாவின் இந்த பேட்டியை பார்த்த இளம் யுவதிகள் பலர் இன்ஸ்டா பக்கத்திலும் இவ்வாறான பல ஜோடிகள் உள்ளனர். இதனால் பெண்ணை பெண் திருமணம் செய்வது தவறு இல்லை என முடிவெடுத்ததாகவும், வனிதா விஜயகுமாரும் இவ்வாறான லெஸ்பியன் உறவை நியாயப்படுத்தி பேசியதும் அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக பிரபலம் ஒருவர் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.
Listen News!