• Jan 19 2025

ப்ளூ சட்டை அறிவு ஜீவியா? அரைவேக்காடா? கிழித்து தொங்கவிட்ட பிஸ்மி! தமிழ் சினிமாவுக்கு அனுதாபங்கள்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழில் மட்டுமின்றி உலகளவில் வெளியாகும் திரைப்படங்களை விமர்சித்து பிரபலமானவர்தான் ப்ளூ சட்டை மாறன். அவரைப் போலவே தமிழ் பிரபலங்களையும் தமிழ் சினிமாவையும் விமர்சிப்பதில் கை தேர்ந்தவராக காணப்படுபவர் தான் பிஸ்மி. இவர் வலைப்பேச்சு என்ற யூடியூப் தளத்தின் ஊடாக மிகவும் பிரபலமானவர்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ படத்தை ப்ளூ சட்டை மாறன் தவறாக விமர்சனம் செய்துள்ளதாகவும், ப்ளூ  சட்டை மாறனின் கதையைக் கேட்காமல் நேரடியாகவே படத்தை சென்று பாருங்கள் என விஜய் ஆண்டனி தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து ப்ளூ சட்டை மாறனும் விஜய் ஆண்டனிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக பல பதிவுகளை வம்பு இழுக்கும் வகையில் போஸ்ட் பண்ணி வந்தார்.

இந்த நிலையில்,  தற்போது யூடியூப் பிரபலமான பிஸ்மி, இவர்களுக்கு இடையிலே ப்ளூ சட்டை மாறன் அறிவு ஜீவியா? அரைவேக்காடா? என ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். தற்போது அவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை பார்ப்போம்.


அதாவது ப்ளூ சட்டை மாறன் என்பவர் நேர்மையான விமர்சகர் என்று கூறியுள்ள பிஸ்மி, அவரை பணம் கொடுத்தும் வாங்க முடியாது, நட்பு பாராட்டினாலும் வாங்க முடியாது, அவர் தான் சரியான வழியில் சென்று படங்களை விமர்சனம் செய்கின்றார் என்று கூறியுள்ளார்.

மேலும், விஜய் ஆண்டனி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர். அவரால் நடித்து வெளியிடப்பட்ட ரோமியோ படம் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தால் தோல்வி பெற்றது என்பது வேடிக்கையாக உள்ளது. அவ்வாறேனில் அவர் நடித்த படம் பலவீனமான ஒன்றாகவே கருதப்படுகிறது.


சினிமா பிரபலங்கள் நடிக்கும் படம் தரமானதாகவும், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று காணப்பட்டு இருந்தால் ப்ளூ சட்டை மாறன் போன்ற ஆயிரம் பேர் விமர்சித்தாலும் அந்த படம் வெற்றி அடையும்.

ஆனால் அவ்வாறு இல்லாமல் தமிழ் சினிமாவில் தரமற்ற படங்களை கொடுத்து அந்தப் படம் வெற்றி அடையாத நிலையில், இவ்வாறான விமர்சகர்கள் மேலே பலியை போட்டு விடுகிறார்கள் சினிமா துறையினர்.

எனவே ப்ளூ சட்டை மாறன் சொல்கின்ற விமர்சனங்கள் அத்தனையும் நியாயமாகவே உள்ளது. அவர் ஏனையவரை போல பணம் வாங்கிவிட்டு எந்த ஒரு பொய்யான விமர்சனத்தையும் முன் வைப்பதில்லை. அவரை பின்பற்றும் ரசிகர்களுக்கு அவர் புத்தி ஜீவியாகவும், தமிழ் சினிமாவில் அவரை பிடிக்காதவர்களுக்கு அரைவேக்காடாகவும் அவர் காணப்படுகிறார் என ப்ளூ சட்டை மாறனின் பெருமையை கூறியுள்ளார் பிஸ்மி.

Advertisement

Advertisement