• Jan 19 2025

பிக் பாஸ்ல பூர்ணிமா பேசியது தேவாரமும் திருவாசகமுமா? கமலின் தரத்தை வச்சு செய்த ஒத்த வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இதில்இவ்வாரம்  அர்ச்சனாவும், நிக்சனும் காரசாரமாக வாக்குவாதம் செய்ய, அது கொஞ்சம் கொஞ்சமாக முற்றி கொலை மிரட்டல் விடும் அளவுக்கு சென்றது.

அதாவது, பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவை பார்த்து 'உன்ன சொருகிடுவன்' என நிக்சன் சொல்லி இருந்தார். குறித்த சொற்பிரயோகம் மிகவும் தவறானது என பிரபலங்கள் மட்டுமின்றி, பொது மக்களும் நிக்சனுக்கு திட்டி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் நிக்சனிடம் சரமாரியாக கேள்வி கேட்டு இருந்தார் கமல்.


மேலும், பிக் பாஸ் வீட்டில் கெட்ட வார்த்தைகள் பேசுவதாக நிக்சன், தினேஷ் உள்ளிட்டோரையும் எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில், இதுவரையில் பிக் பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா பேசிய கெட்ட வார்த்தைகளை பற்றி மட்டும் கமல் வாய் திறக்க மாட்டார் என்பது போல, ஜோ மைக்கேல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு கழுவி ஊற்றி உள்ளார். 

அதன்படி, பிக் பாஸ் வீட்டில் கெட்ட வார்த்தையையோ வன்முறை தொனி கலந்த வார்த்தையையோ பேசக் கூடாது என கமல் எச்சரித்த நிலையில், அப்போ பூர்ணிமா பேசியது எல்லாம் தேவாரமும் திருவாசகமுமா கமல் சார் என கேள்வியும் எழுப்பி உள்ளார் ஜோ மைக்கேல்.  


Advertisement

Advertisement