• Mar 26 2026

அயலானா? கேப்டன் மில்லரா? நடிகர் விஜய்க்கு பிடித்த படம் எது தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பொங்கல் தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 மற்றும் விஜய் சேதுபதி மெர்ரி கிறிஸ்மஸ் ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இதில் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் அதிக அளவில் தியேட்டர்களில் ரிலீசானது. இந்த இரண்டு படங்களும் வசூலிலும் வேட்டையாடி வருகின்றது.


இந்த நிலையில், நடிகர் விஜய்யை ரொம்பவே கவர்ந்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி, நடிகர் விஜய்க்கு கேப்டன் மில்லர் படம் தான் ரொம்பவே பிடிச்சிருக்காம். கேப்டன் மில்லர் ரிலீஸ் ஆன நிலையில், அந்த படத்திற்கு சண்டை காட்சிகளை வடிவமைத்த திலீப் சுப்புராயன் தான் தற்போது விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கு சண்டை காட்சிகளை படமாக்கி வருகிறார்.


நடிகர் விஜய் கேப்டன் மில்லர் படத்தை பார்த்திருக்க மாட்டார் என நினைத்த ஸ்டன்ட் மாஸ்டருக்கு சர்ப்ரைஸாக படம் தாறுமாறா இருக்கு.. அதிலும் உங்க வொர்க் சூப்பர் என விஜய் பாராட்டினார் என திலீப் சுப்புராயன் கூறியுள்ளார்

Advertisement

Advertisement