• Mar 26 2026

பொங்கல் ரேஸில் மாஸ் காட்டிய படம் எது தெரியுமா? வெளியான முழு விபரம்! பிரமிக்கும் வசூல் வேட்டை

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பொங்கல் தினத்தில் வெளியான படங்களில் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய இரண்டு படங்களுமே கடும் போட்டியோடு காணப்பட்டது.

இந்நிலையில், குறித்த திரைப்படங்கள் வெளியாகி 10 நாட்கள் முடிந்த நிலையில், அயலான் பக்கத்தில் நெருங்க முடியாமல் போராடி வருகிறது கேப்டன் மில்லர்.

அதன்படி, பொங்கல் தினத்தன்று வெளியான படங்களில் தொடர்ந்து வசூலில் ஆதிக்கம் செலுத்தும் படமாக அயலான் காணப்படுகிறது.


மேலும், ஞாயிற்றுக் கிழமையான நேற்று 2.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது அயலான். ஒட்டுமொத்தமாக அயலான் இதுவரை 67 முதல் 70 கோடிக்கு அதிகமாக கலெக்‌ஷன் செய்துள்ளதாம். 

ஆனால், கேப்டன் மில்லர் படத்தின் நேற்றைய வசூல் 1 கோடி ரூபாய் மட்டுமே என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் மொத்தம் 10 நாட்களுக்கான வசூல் 50 கோடி ரூபாய் இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதன் மூலம் யாருமே எதிர்பாராத வகையில் கேப்டன் மில்லரை விட அயலான் இந்தாண்டு பொங்கல் ரேஸில் மாஸ் காட்டியுள்ளதாக கோலிவுட் சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement