தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக திகழ்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு 70 வயது ஆன போதும் இன்று வரையில் தனது ஸ்டைலாலும் நடை உடை பாவணையாளும் ஹீரோவாக நடித்து வருகின்றார்.
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் சூப்பர் ஸ்டாரும் இடம்பிடித்து வருகின்றார். இவரும் கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக சம்பளத்தை வாங்குகிறார் . ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் ஓப்பனிங் பெரிய அளவில் தான் வரவேற்பை பெறுகின்றது.
சினிமாவில் உச்ச நடிகராக காணப்படும் ரஜினிகாந்த் பற்றியும் அவ்வப்போது பல விமர்சனங்கள் குவிந்தவாறு உள்ளன. எந்தவொரு மக்கள் பணிக்காகவும் இவர் கையில் இருந்து ஒரு பைசா கூட வராது என பலர் விமர்சித்து உள்ளார்கள். ஆனாலும் அஜித்தைப் போலவே இவரும் பப்ளிசிட்டி பண்ணாமல் பல உதவிகளை செய்து வருவதாக செய்திகள் உலா வருகின்றன.
இந்த நிலையில், இவருடைய மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த ஒரு காரியம் இன்று ஒட்டுமொத்த திரைப்பட சங்கத்தையே ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
அதாவது சென்னை திரைப்பட இயக்குனர் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளின் கல்வி செலவுக்காக ஆண்டுதோறும் பத்து லட்சம் நன்கொடையாக கொடுப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாக்குறுதி அளித்துள்ளார்.
முதல் கட்டமாக 5 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர் வி உதயகுமாரிடம் கொடுத்து உள்ளார்.
மேலும், இதைத்தான் ஆண்டுதோறும் செய்ய விரும்புவதாகவும் என்னுடைய சொந்த காசில் செய்ய ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது இவருடைய இந்த செயலுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
இதேவேளை, இயக்குனர் சங்கத்தில் எத்தனையோ உதவி இயக்குனர்களின் பிள்ளைகள் கல்வி செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருவது ஐஸ்வர்யாவின் காதுக்கு தெரிய வந்ததை தொடர்ந்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் .
Listen News!