• Apr 02 2025

வெறும் 20 ரூபாயில வேலையை முடிச்சிருவாங்க.. நாங்க எல்லாம் என்ன செய்ய.. புலம்பும் ‘இரவின் நிழல்’ நடிகை..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

20 ரூபாய் முதல் 50 ரூபாய் மதிப்புள்ள சோப்பு போட்டு சாதாரண பெண்கள் மேக்கப் வேலையை முடித்து விடுகிறார்கள் என்றும் ஆனால் நாங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் அவர்கள் மாதிரி எங்களால் பிரஷ்ஷாக இருக்க முடியவில்லை என்றும்இரவின் நிழல்படத்தில் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திரை உலகில் இருக்கும் நட்சத்திரங்கள் மேக்கப்பிற்காகவே ஆயிரக்கணக்கில், ஒரு சிலர் லட்ச கணக்கில் செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்திபன் நடித்து இயக்கியஇரவின் நிழல்என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த சாய் பிரியங்கா ரூத் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை சோப்பு வாங்கி குளித்து எனக்கு தெரிந்த பலர் பிரஷ்ஷாகி விடுகிறார்கள், விலை  உயர்ந்த சோப்பு கூட அவர்கள் வாங்குவதில்லை, ஆனால் அவர்களால் எப்படி இந்த அளவுக்கு பிரஷ்ஷாக இருக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் நான் சன் ஸ்க்ரீன், மாய்ஸ்சரைசர், டே கேர், நைட் கேர், ஆகியவைகளை எடுத்து கொள்கிறேன், அதுமட்டுமின்றி விட்டமின் சி, விட்டமின் கே ஆகியவைகளை பயன்படுத்துகிறேன், இருப்பினும் என்னால் அவர்கள் மாதிரி பிரஷ்ஷாக முடியவில்லை,  50 ரூபாய் சோப்பு போட்டு குளித்து பிரஷ்ஷாக இருக்கும் அவர்களை பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கிறது, இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லைஎன்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவுக்கு கமெண்ட் பதிவு செய்து வரும் நெட்டிசன்கள், உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி என்றும் இயற்கையான முறையில் மேக்கப் போடுவதற்கு இணை எதுவும் இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement