• Sep 19 2025

காதலானை அறிமுகம் பிரபல நடிகை...! யார் தெரியுமா ? வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ‘கருப்பன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தன்யா ரவிச்சந்திரன், தற்போது தன் காதல் வாழ்க்கையை அதிகாரப்பூர்வமாக ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். பிரபல  நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பதும், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் மனதிறந்த ஒரு பதிவு செய்துள்ள தன்யா, ஒளிப்பதிவாளர் கௌதம் உடன் எடுத்துக்கொண்ட இனிமையான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் இருவரும் முத்தம் கொடுப்பது போல உள்ளது.


மேலும் “ஒவ்வொரு பிரேமும் இதற்கு வழிவகுக்கிறது - ஒரு முத்தம், ஒரு வாக்குறுதி, எப்போதும் மற்றும் எப்போதும் ♾️ GT @gouthamgdop” என பதிவு செய்துள்ள தன்யா, தனது காதலை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் விறுவிறுப்பாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் “க்யூட் ஜோடி”, “வாழ்த்துகள்”, “இனி திருமண அறிவிப்பும் வரட்டும்” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement